December 12, 2024
தேசியம்
செய்திகள்

புதிய குடிவரவாளர்களுக்கு எதிராக Ontario முதல்வர் கருத்து!

யூதப் பாடசாலை துப்பாக்கிச் சூட்டின் பின்னணியில் புதிய குடிவரவாளர்கள் உள்ளனர் என Ontario முதல்வர் Doug Ford குற்றம் சாட்டினார்.

கடந்த வார இறுதியில் Torontoவில் யூதப் பாடசாலை மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு புதிய குடிவரவாளர்கள் காரணம் என முதல்வர் Doug Ford குற்றம் சாட்டினார்.

இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் கனடாவுக்கு வரக்கூடாது என அவர் கூறினார்.

இதன் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு  சிறையில் அடைக்கப்பட வேண்டும் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் முதல்வரின் கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து, அவர் மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தினர்.

முதல்வரின் கருத்துக்கள் இனவெறியை தூண்டுபவை என NDP தலைவர் Marit Stiles கூறினார்.

பசுமைக் கட்சித் தலைவர் Mike Schreiner, முதல்வரின் கருத்துகள் ஆபத்தானது என தெரிவித்தார்.

Bais Chaya Mushka ஆரம்ப பாடசாலையில் பள்ளியில் கடந்த சனிக்கிழமை (25) அதிகாலை 5 மணியளவில் இரண்டு சந்தேக நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதாக Toronto காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதில் பாடசாலை கட்டிடத்திற்கு சேதம் ஏற்பட்டிருந்தாலும் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் காவல்துறையினர் கூறினர்.

இந்த விசாரணையில் வெறுப்புக் குற்றப்பிரிவு ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஆனாலும் வெறுப்பு அல்லது மதவெறியால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதா என கூற முடியாது என காவல்துறையினர் கூறினர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் எவரையும் காவல்துறையினர் இதுவரை அடையாளம் காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கனடாவில் சராசரி வீட்டு வாடகை இந்த ஆண்டு 15.4 சதவீதம் அதிகரிப்பு

Lankathas Pathmanathan

James Smith Cree முதற்குடி பாதுகாப்புக்கு பிரதமர் நிதி உதவி

Lankathas Pathmanathan

1 கோடி டொலர் தங்க நகை கடத்தல் – கனடிய தமிழருக்கு எதிரான தண்டனை உறுதி : CBSA தகவல்!

Gaya Raja

Leave a Comment