உலகத் தமிழர் பேரவையின் (Global Tamil Forum -GTF) உறுப்பினர் நிலையில் இருந்து விலகும் முடிவை கனடியத் தமிழர் பேரவை (CTC) எடுத்துள்ளது.
கனடியத் தமிழர் பேரவையின் உறுப்பினர்களுக்கு இந்த தகவல் மின்னஞ்சல் மூலம் பகிரப்பட்டுள்ளது.
கனடியத் தமிழர் பேரவையின் நிர்வாக இயக்குநர் டான்ரன் துரைராஜா வியாழக்கிழமை (30) இந்த தகவலை தமது உறுப்பினர்களுடன் பகிர்ந்துள்ளார்.
இந்த மின்னஞ்சலின் பிரதி ஒன்றை தேசியம் பெற்றுக் கொண்டது.
நீண்ட பரிசீலனையின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்த மின்னஞ்சல் குறிப்பிடுகிறது.
இந்த நடவடிக்கை எங்கள் பணியில் கவனம் செலுத்துவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது என கனடியத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
ஆனாலும் இந்த முடிவுக்கான காரணம் எதுவும் அந்த மின்னஞ்சலில் பகிரப்படவில்லை.
உலக தமிழ் பேரவையுடன் இணைந்து கனடிய தமிழர் பேரவை முன்னெடுத்த இமாலய பிரகடனம் குறித்த எதிர்ப்பு காரணமாக கனடிய தமிழர் பேரவை உலக தமிழ் பேரவையின் உறுப்பினர் நிலையில் இருந்து விலகவேண்டும் என கடந்த பல மாதங்களாக வலியுறுத்தப்படுகிறது.
இமாலய பிரகடனம் குறித்த அதிருப்தியும் கண்டனங்களும் கனடிய தமிழர்கள் மத்தியில் தொடர்கிற நிலையில் இந்த அறிவித்தல் வெளியாகியுள்னது.