September 16, 2024
தேசியம்
செய்திகள்

தணிக்கையை இரத்து செய்ய சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

Progressive Conservative அரசாங்கத்தின் தன் மீதான தணிக்கையை இரத்து செய்ய சட்டமன்ற உறுப்பினர் முன்வைத்த கோரிக்கையை Ontario நீதிமன்றம் நிராகரித்தது.

Hamilton மாகாண சபை உறுப்பினர் Sarah Jama இந்த கோரிக்கையை Ontario நீதிமன்றத்தில் முன்வைத்தார்.

இந்த விடயத்தில் தலையிட அதிகாரம் இல்லை என Ontario உயர் நீதிமன்றம்  தீர்மானித்தது.

மூன்று நீதிபதிகள் கொண்ட குழு கடந்த வாரம் இந்த தீர்ப்பளித்தது.

இந்த விடயம் “சட்டமன்ற  சிறப்புரிமை” குறித்தது எனவும், இது தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளுக்கு சட்டப்பேரவைக்குள் சுதந்திரமான பேச்சுரிமையை அனுமதிக்கிறது எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது

இந்த நிலையில் Sarah Jama தொடர்ந்து சட்டசபையில் தணிக்கை செய்யப்படுவார்.

இந்த நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து பரிசீலிப்பதாக Sarah Jama கூறினார்.

பாலஸ்தீனிய நிலத்தின் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் முடிவுக்குக் கொண்டுவர கடந்த வருடம் October மாதம் Sarah Jama கோரியிருந்தார்.

Related posts

Ontarioவில் நோய் வாய்ப்பட்ட காலத்திற்கான விடுப்பு ஊதியத் திட்டம் அறிவிப்பு!

Gaya Raja

காசா மருத்துவமனை மீதான தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாதது: கனடிய பிரதமர்!

Lankathas Pathmanathan

Ontario, Quebec மாகாணங்களில் வெள்ள அபாயம்

Lankathas Pathmanathan

Leave a Comment