சிறுபான்மை Liberal அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு வழங்குவது குறித்து NDP இதுவரை முடிவு செய்யவில்லை என கட்சி தலைவர் Jagmeet Singh கூறினார்.
நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை (29) செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த கருத்தை தெரிவித்தார்
கனடா ஊனமுற்றோர் நலத்திட்டம் குறித்த விடயத்தில் அரசாங்கத்திடமிருந்து மேலும் தெளிவு தேவை என அவர் கூறினார்.
இந்த விடயம் குறித்து பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாக Jagmeet Singh தெரிவித்தார்.
Conservative, Bloc Quebecois, Green கட்சிகள் Liberal அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க உள்ளதாக
ஏற்கனவே கூறியுள்ளன.
NDB யின் ஆதரவு இல்லாமல், Liberal அரசாங்கத்தின் இந்த வரவு செலவு திட்டம் வாக்களிப்பில் தோல்வியடையும்.
இதன் மூலம் அரசாங்கம் வீழ்ச்சியடையும் வாய்ப்பை எதிர்கொள்கிறது.