தேசியம்
செய்திகள்

Ontario: சூரிய கிரகணத்திற்கு பின்னர் 115க்கும் மேற்பட்டவர்களுக்கு கண் பாதிப்பு?

கடந்த சூரிய கிரகணத்திற்கு பின்னர் Ontarioவில் 115 க்கும் மேற்பட்டவர்கள் கண் பாதிப்புகளை முறையிட்டுள்ளனர்.

இந்த மாத ஆரம்பத்தில் Ontarioவில் சூரிய கிரகணத்தை பார்த்த 115 க்கும் மேற்பட்டோர், அதன் பின்னர் கண் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக மாகாணத்தில் உள்ள கண் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

April 8 முதல் 118 கண் பாதிப்பு முறைப்பாடுகளை பெற்றுள்ளதாக Ontario கண் மருத்துவர்கள் சங்கம் (Ontario Association of Optometrists -OAO) கூறுகிறது.

Windsor முதல் Ottawa வரை இந்த முறைப்பாடுகள் பரவியிருந்ததாக OAO தெரிவித்துள்ளது.

கிரகணத்தின் போது சூரியனை நேரடியாக பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து சுகாதார, அரசு அதிகாரிகள் ஏற்கனவே எச்சரித்திருந்தனர்.

அதேவேளை Quebecகில் April 17 வரை 28 கண் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

Related posts

Atlantic பகுதி முழுவதும் சூறாவளி எச்சரிக்கை

Lankathas Pathmanathan

முதலாவது தடுப்பூசியை பெற்றவர்களின் 1.3 சதவீதமானவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்

Gaya Raja

வதிவிட பாடசாலைகளின் இறப்புகள் குறித்த விசாரணைக்கு பிரதமர் நிதி உதவி

Lankathas Pathmanathan

Leave a Comment