தேசியம்
செய்திகள்

Toronto விமான நிலைய தங்க கொள்ளையில் தமிழர் உட்பட நால்வர் கைது!

Toronto விமான நிலையத்தில் நிகழ்ந்த 20 மில்லியன் டொலர் தங்கக் கொள்ளை விசாரணையில் தமிழர் உட்படநால்வர் கைது செய்யப்பட்டனர்.

Toronto Pearson சர்வதேச விமான நிலையத்தில் 20 மில்லியன் டொலர் பெறுமதியான தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் Ontario மாகாணத்தைச் சேர்ந்த மூன்று ஆண்களும் அமெரிக்காவின் Florida மாநிலத்தை சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கொள்ளையுடன் தொடர்புடைய எல்லை தாண்டிய துப்பாக்கி கடத்தல் சதியை அமெரிக்க அதிகாரிகள் கண்டுபிடித்த பின்னர் இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டன.

கைதானவர்கள் Ontario மாகாணத்தின் Brampton நகரை சேர்ந்த 2 வயதான Durante King-Mclean, 34 வயதான பிரசாத் பரமலிங்கம், 36 வயதான Archit Grover, அமெரிக்காவின் Florida மாநிலத்தின் Ft. Lauderdale நகரை சேர்ந்த 25 வயதான Jalisa Edwards என அமெரிக்க நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் நாடு கடந்த துப்பாக்கி கடத்தலில் ஈடுபட சதி செய்ததாக அமெரிக்காவில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதில் அமெரிக்க அதிகாரிகள் ஈடுபாடு September 2023ஆம் ஆண்டு ஆரம்பித்தது.

வாகன விதிமீறல்களுக்கு Durante King-Mclean அமெரிக்காவில் கைதானார்.

அவர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கி இருந்ததாக அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.

அவரது வாகனத்தை சோதனையிட்ட அதிகாரிகள்  65 துப்பாக்கிகள் கண்டுபிடித்தனர்.

அவை கனடாவிற்கு கடத்தப்படவிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த துப்பாக்கி கடத்தல் குற்றச்சாட்டில் April 2023 முதல் பிரசாத் பரமலிங்கம் ஈடுபட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

Toronto விமான நிலையத்தில் தங்கம் திருடப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கும் துப்பாக்கி கடத்தல் குற்றச்சாட்டுக்கும் இடையிலான தொடர்பு தெளிவாக தெரியவில்லை.

இந்த நிலையில் Pearson சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தங்கம் திருடப்பட்டது குறித்த இரகசிய, கூட்டு விசாரணையான “Project 24K” குறித்த விவரங்களை காவல்துறையினர் புதன்கிழமை (17) அறிவிப்பார்கள்.

நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்படும் வரை குற்றம் சாட்டப்பட்ட அனைத்து நபர்களும் நிரபராதிகள் என கருதப்படுகிறது.

Related posts

Quebecகில் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் மூன்றாவது தடுப்பூசியை பெறலாம்!

Gaya Raja

பள்ளிவாசல் வழிபாட்டாளர்கள் மீதான வாகன தாக்குதல் முயற்சி குறித்து கனடியத் தமிழர் பேரவை கண்டனம் !

Lankathas Pathmanathan

அகால மரணமான தமிழ் இளைஞனின் இறுதிக் கிரியைகள் நிறைவடைந்தன!

Gaya Raja

Leave a Comment