2024 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் வரவு செலவுத் திட்டத்தில் துண்டு விழும் தொகையாக 39.8 பில்லியன் டொலர் கணிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான Chrystia Freeland செவ்வாய்க்கிழமை (16) சமர்ப்பித்தார்.
நிதியமைச்சராக அவர் சமர்ப்பிக்கும் நான்காவது வரவு செலவுத் திட்டம் இதுவாகும்.
2023-24 இல் மத்திய அரசின் பற்றாக்குறையை 40.1 பில்லியன் டொலராக வைத்திருக்கும் இலக்கை Chrystia Freeland எட்டினார்.
Liberal அரசாங்கம் ஏற்கனவே கடந்த சில வாரங்களாக வரவு செலவுத் திட்டத்தின் குறிப்பிடத்தக்க அறிவித்தல்களை தேர்தல் பிரச்சார பாணியில் வெளியிட்டு வருகிறது.
இந்த வரவு செலவுத் திட்டத்தில் அதிக வருமானம் ஈட்டுபவர்களுக்கு புதிய வரியும், புதிய வீட்டு கட்டுமான அறிவித்தலும் முன்னுரிமை பெறுகிறது .
ஆறு ஆண்டுகளில் 39.2 பில்லியன் டொலர்கள் புதிய செலவினங்களாக இந்த வரவு செலவு திட்டம் அறிவித்துள்ளது
2024-25 இல் மத்திய அரசின் பற்றாக்குறை 39.8 பில்லியன் டொலராக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
2025-26 இல் 38.9 பில்லியனாகவும் இருக்கும் பற்றாக்குறை அடுத்த மூன்று ஆண்டுகளில் தொடர்ந்து குறையவுள்ளது.
2028-29 இல் பற்றாக்குறை 20 பில்லியன் டொலராக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
2008 ஆம் ஆண்டின் பின்னர் ஒரு முறை மட்டுமே சமநிலை படுத்தப்பட்ட மத்திய வரவு செலவு சமர்ப்பிக்கப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.