September 29, 2026
தேசியம்
செய்திகள்

புதிய வீடுகள் முதன்முறையாக கொள்வனவு செய்பவர்களின் அடமானங்களுக்கு 30 வருட கடன் அனுமதி?

புதிய வீடுகள் முதன்முறையாக கொள்வனவு செய்பவர்களின் அடமானங்களுக்கு 30 வருட கடனை அனுமதிக்க கனடிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

கனடிய அரசாங்கம் புதிதாக கட்டப்பட்ட வீடுகள் முதல் முறையாக கொள்வனவு செய்பவர்களுக்கு காப்பீடு செய்யப்பட்ட அடமானங்களில் 30 வருட கடனுதவி காலங்களை அனுமதிக்க முடிவு செய்துள்ளது.

நிதியமைச்சர் Chrystia Freeland வியாழக்கிழமை Torontoவில் இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

இது August 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அமைச்சர்  கூறினார்.

முதன் முறையாக வீடு கொள்வனவு செய்பவர்கள் RRSPயில் இருந்து மீளப்பெறும் தொகையை அரசாங்கம் இரட்டிப்பாக்கும் எனவும்  Chrystia Freeland கூறினார்.

மத்திய அரசாங்கத்தின் வரவு செலவு திட்டம் வெளியிடப்படும் April 16ஆம் திகதி முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வரவுள்ளது.

Related posts

Toronto நகரசபை உறுப்பினர் தேர்தலில் தமிழர் போட்டி

Lankathas Pathmanathan

COVID தொற்றின் புதிய மாறுபாடுகள் தற்போதைய சுகாதார நடவடிக்கைகளின் கீழ் மீண்டும் எழுச்சி பெறக்கூடும் என எச்சரிக்கை!

Lankathas Pathmanathan

Venezuela மக்களுக்கு கனடாவின் ஆதரவை உறுதிப்படுத்திய Mark Carney

Lankathas Pathmanathan

Leave a Comment