தேசியம்
செய்திகள்

புதிய வீடு கட்டுமான முயற்சிகளுக்கு $600 மில்லியன் நிதி?

புதிய வீடு கட்டுமான முயற்சிகளுக்கு பல மில்லியன் டொலர்களுக்கு நிதி ஒதுக்கப்படுவதாக பிரதமர் Justin Trudeau அறிவித்தார்.

எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் 600 மில்லியன் டொலர்களுக்கு மேல் நிதியை ஒதுக்க மத்திய அரசு உத்தேசித்துள்ளது.

Calgary நகரில் வெள்ளிக்கிழமை (05) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் Justin Trudeau இந்த நிதி பங்களிப்பு குறித்த அறிவித்தலை வெளியிட்டார்.

இந்த புதிய நிதி பங்களிப்பு வீடுகள் கட்டப்படும் முறையை மாற்ற உதவும் என பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

தற்போதைய வீட்டுப் பற்றாக்குறையை சமாளிக்க தேவையான அளவில் வீடுகள் கட்டப்படுவதை எளிதாகவும் மலிவாகவும் இந்த நிதி பங்களிப்பு மாற்றும் எனவும் Justin Trudeau கூறினார்.

கனடாவின் துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான Chrystia Freeland 2024 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் வரவு செலவுத் திட்டத்தை எதிர்வரும் 16ஆம் திகதி தாக்கல் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Ontarioவில் அதிகரிக்கும் குறைந்தபட்ச ஊதியம்

Lankathas Pathmanathan

தடுப்பூசி பெற்ற நிலையின் அடிப்படையில் சர்வதேச பயணிகள் பிரிக்கப்பட மாட்டார்கள் – இரண்டு கனேடிய விமான நிலையங்கள் முடிவு

Gaya Raja

கனடாவின் புதிய ஆளுநர் நாயகம் 26ஆம் திகதி பதவி ஏற்கிறார்!

Gaya Raja

Leave a Comment