Ontarioவில் புதிய ‘ஒற்றை கட்டணம் – One Fare’ போக்குவரத்து திட்டம் திங்கட்கிழமை (26) முதல் அமுலுக்கு வருகிறது.
Ontario மாகாண பொது போக்குவரத்து சேவையில் இந்த ஒற்றை கட்டண திட்டம் அமுலுக்கு வருகின்றது.
Toronto பொது போக்குவரத்து சேவை (TTC), GO போக்குவரத்துச் சேவை, Brampton போக்குவரத்துச் சேவை, Durham பிராந்திய போக்குவரத்துச் சேவை, MiWay, York போக்குவரத்துச் சேவை ஆகியவற்றுக்கு இடையே பயணிப்பவர்கள் இந்த திட்டத்தின் மூலம் பலனடைவார்கள்.
இந்த புதிய திட்டத்தின் மூலம் மேற்படி சேவைகளுக்கும் இடையில் பயணிக்கும் பயணிகள் ஒரு முறை மட்டும் கட்டணம் செலுத்தினால் போதுமானதாகும்.
பொது போக்குவரத்து பாவனையாளர்களுக்கு அதிகரித்த போக்குவரத்து தெரிவுகளை குறைந்த கட்டணத்தில் இந்த திட்டம் வழங்கும் என மாகாண முதல்வர் Doug Ford தெரிவித்தார்.
இந்த திட்டத்தின் மூலம் பொதுப் போக்குவரத்து பாவனையாளர்களுக்கு ஆண்டுக்கு சராசரியாக 1,600 டொலர்களை சேமிக்க முடியும் என போக்குவரத்து இணை அமைச்சர் விஜய் தணிகாசலம் தெரிவித்தார்.