ஹமாஸ் தலைவர்களுக்கு கனடிய அரசாங்கம் தடை விதித்துள்ளது.
கடந்த ஆண்டு இஸ்ரேல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த தடையை கனடா அறிவித்துள்ளது.
இது ஹமாசுக்கு நிதி திரட்டுவதில் தடையாக இருக்கும் என தான் நம்புவதாக கனடிய வெளியுறவு அமைச்சர் Mélanie Joly நம்பிக்கை தெரிவித்தார்.
கனடிய அரசாங்கம் ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட்டுள்ளது.
ஹமாசுடன் தொடர்புடைய 10 பேருடன் கனடியர்கள் எந்த விதமான நிதி பரிவர்த்தனைகளில் ஈடுபட கூடாது என செவ்வாய்க்கிழமை (06) அறிவித்தது.
இதில் ஹமாசுடன் தொடர்புடைய மூத்த தலைவர் உட்பட, இஸ்லாமிய ஜிஹாத் – Islamic Jihad – என்ற பாலஸ்தீன போராளி குழுவுடன் தொடர்புடைய ஒருவரும் அடங்குகிறார்.
ஹமாஸ் தலைவர் Yahya Sinwarக்கு கனடா தடை விதித்துள்ளது.
இவர் இஸ்ரேலில் 1,200 பேரைக் கொன்று 250 பேரை பணயக் கைதிகளாக கைப்பற்றிய October 7 தாக்குதலுக்கு சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்.
இஸ்லாமிய ஜிஹாத் இராணுவத் தலைவர் Akram al-Ajouriயும் தடை செய்யப்பட்ட இந்தப் பட்டியலில் உள்ளார்.