December 12, 2024
தேசியம்
செய்திகள்

Manitoba எல்லையில் 406 KG போதைப்பொருள் மீட்பு!

Manitoba எல்லைக் கடவையில் 400 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

January மாத ஆரம்பத்தில் தெற்கு Manitoba எல்லையில் 406 கிலோ கிராம் methamphetamine என்ற போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கனடா எல்லை சேவை நிறுவனம் (CBSA) இந்த அறிவித்தலை வெளியிட்டது.

Prairie மாகாண வரலாற்றில் CBSA கைப்பற்றிய மிகப்பெரிய போதைப்பொருள் இதுவாகும்.

January 14ஆம் திகதி  Winnipeg செல்லும் போக்குவரத்து கனரக வாகனத்தை சோதனை செய்ததைத் தொடர்ந்து Boissevain நுழைவு துறைமுகத்தில் இந்த போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு சுமார் $50,780,000 என CBSA தெரிவித்துள்ளது.

இதில் வாகனத்தின் சாரதி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அவர் February மாதம் Manitoba நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.

Related posts

ஹமாஸ் தலைவர்களுக்கு கனடா தடை

Lankathas Pathmanathan

கட்சித் தலைமையிலிருந்து O’Toole விலக்கப்படுவாரா?

Gaya Raja

Sweden அணியை வெற்றி கொண்டது கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment