கனடாவில் துப்பாக்கிகள் தொடர்பான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக புதிய விவரங்கள் வெளியாகின.
கனடாவில் துப்பாக்கி தொடர்பான வன்முறை குற்றங்கள் அதிகரித்து வருவதாக புள்ளிவிபரத் திணைக்களத்தின் புதிய அறிக்கை தெரிவிக்கிறது.
100,000 பேருக்கு துப்பாக்கி தொடர்பான வன்முறை குற்றங்கள் 2022 இல் 8.9 சதவீதம் அதிகரித்துள்ளது.
2009 இல் ஒப்பிடக்கூடிய தரவு முதன் முதலில் தொகுக்கப்பட்டதிலிருந்து துப்பாக்கி தொடர்பான வன்முறை குற்றங்கள் விகிதம் 2022இல் மிக அதிகமாக உள்ளதாக செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை கூறுகிறது.
துப்பாக்கி தொடர்பான இந்த வன்முறைக் குற்றங்களின் அதிகரிப்பு, Ontarioவில் ஏற்பட்ட வன்முறைகள் அதிகரிப்பால் உந்தப்பட்டதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
பதிவாகியுள்ள தரவுகளின்படி, Ontario மாகாணத்தில் 2022 ஆம் ஆண்டில் 4,791 துப்பாக்கி வன்முறை குற்றங்கள் பதிவாகியுள்ளன.
இது முந்தைய ஆண்டை விட 1,016 அதிக வன்முறை குற்றங்களாகும்.
இது கனடா முழுவதும் பதிவான வன்முறை சம்பவங்களின் 70 சதவீத அதிகரிப்புக்கு காரணமாகும்.
கனடாவில் துப்பாக்கி குற்றங்கள் அதிகரிப்பதற்கு Alberta, British Columbia ஆகிய மாகாணங்களில் பதிவான அதிகரித்த வன்முறைகள் காரணமாகும்.