தேசியம்
செய்திகள்

Rainbow பால வாகன வெடிப்பு சம்பவத்துடன் பயங்கரவாதம் தொடர்பு பட்டடத்திற்கான ஆதாரம் இல்லை: கனடிய பொது பாதுகாப்பு அமைச்சர்

Rainbow பால வாகன வெடிப்பு சம்பவத்துடன் பயங்கரவாதம் தொடர்பு பட்டடத்திற்கான எந்த ஆதாரமும் இல்லை என கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சர் Dominic LeBlanc உறுதிப்படுத்தினார்.

இந்த வாகன விபத்து பயங்கரவாதத்துடன் தொடர்புடையது என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என அமெரிக்க அதிகாரிகள் புதன்கிழமை (22) இரவு தெரிவித்தனர்.

இந்த நிலையில் கனடிய பொது பாதுகாப்பு அமைச்சரின் கருத்து வியாழக்கிழமை (23) வெளியானது.

கனடாவையும் அமெரிக்காவையும் இணைக்கும் Rainbow பாலத்தில் புதன்கிழமை காலை நிகழ்ந்த வாகன வெடிப்பில் 2 பேர் உயிரிழந்தனர்.

“கனடா அரசாங்கமும் எங்கள் சட்ட அமலாக்க முகவர்களும் எங்கள் அமெரிக்க சகாக்களுடன் தொடர்ந்து ஒத்துழைக்கும்” என அமைச்சர் Dominic LeBlanc ஒரு சமூக ஊடக பதிவில் கூறினார்.

Rainbow பாலம் வியாழக்கிழமை தொடர்ந்து இரண்டாவது நாளாக விசாரணைக்காக மூடப்பட்டுள்ளது.

Related posts

இரண்டாவது நாளாகவும் மூடப்பட்டுள்ள Rainbow பாலம்!

Lankathas Pathmanathan

B.C. புதிய முதல்வராக David Eby பதவியேற்பு

Lankathas Pathmanathan

தொற்று காலத்தில் தேர்தல் வேண்டாம்: நாடாளுமன்ற உறுப்பினர்கள் அநேகர் ஆதரவாக வாக்களித்தனர்

Gaya Raja

Leave a Comment