தேசியம்
செய்திகள்

Air India விமான சேவைக்கு எதிரான அச்சுறுத்தல் குறித்து RCMP விசாரணை

Air India விமான சேவைக்கு எதிரான அச்சுறுத்தல் குறித்து விசாரித்து வருவதாக RCMP தெரிவிக்கின்றது.

November 19 முதல் சீக்கியப் பயணிகள் Air India விமான சேவையை தவிர்க்குமாறு இணையத்தில் பரவும் ஒரு video அறிவுறுத்துகிறது.

இந்த அச்சுறுத்தல் குறித்து விசாரணை நடத்தி வருவதாக கனேடிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அரசாங்கம் அதன் பாதுகாப்பு பங்காளிகளுடன் இணைந்து இந்த அச்சுறுத்தல் குறித்து விசாரணை நடத்தி வருவதாக மத்திய போக்குவரத்து அமைச்சர் Pablo Rodriguez வியாழக்கிழமை (09) தெரிவித்தார்.

“விமானப் போக்குவரத்துக்கு ஏற்படும் எந்த ஒரு அச்சுறுத்தலையும் எங்கள் அரசாங்கம் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்கிறது” என அவர் கூறினார்.

கனடியர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க தேவையான அனைத்தையும் செய்வோம் எனவும் Pablo Rodriguez  எச்சரித்தார்.

இந்த அச்சுறுத்தல் குறித்தும், முன்னெடுக்கப்படும் விசாரணைகள் குறித்தும் மேலும் விவரங்கள் எதையும் வழங்க முடியாது என RCMP செய்தித் தொடர்பாளர் கூறினார்.

ஆனாலும் எந்த ஒரு சாத்தியமான கவலைகளையும் நிவர்த்தி செய்ய அதிகாரிகள் இணைந்து செயல்படுவதாக அவர் தெரிவித்தார்.

காலிஸ்தான் எனப்படும் சுதந்திர சீக்கிய தேசத்துக்காக போரிடும் Gurpatwant Singh Pannun என்பவரால் இந்த video வெளியிடப்பட்டது.

ஆனாலும் இதனை ஒரு அச்சுறுத்தல் என்பதை அவர் மறுத்துள்ளார்.

இதனை இந்திய வணிகங்களுக்கு எதிரான புறக்கணிப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும் என அவர் வர்ணித்தார்.

Related posts

Ontarioவில் சுகாதார பராமரிப்பாளர்களுக்கும் கல்வி தொழிலாளர்களுக்கும் கட்டாய தடுப்பூசிகள்?

Gaya Raja

கனடாவின் மக்கள் தொகை 40 மில்லியனை எட்டுகிறது!

Lankathas Pathmanathan

மளிகை தள்ளுபடி கொடுப்பனவுகளை CRA வழங்குகிறது!

Lankathas Pathmanathan

Leave a Comment