தேசியம்
செய்திகள்

நைஜீரியாவில் உள்ள கனடா உயர் ஸ்தானிகராலய வெடி விபத்தில் 2 பேர் பலி

நைஜீரியாவில் உள்ள கனடா உயர் ஸ்தானிகராலயத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

நைஜீரியாவின் தலைநகர் அபுஜாவில் உள்ள கனடாவின் உயர் ஸ்தானிகராலயத்தில் திங்கட்கிழமை (06) தீ விபத்து ஏற்பட்டதாக முதலில் அறிவிக்கப்பட்டது.

ஆனாலும் அது தீ விபத்து அல்ல; மாறாக ஒரு வெடிவிபத்து என வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

நைஜீரியாவில் உள்ள கனடா உயர் ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்ற வெடி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக கனடிய வெளிவிவகார அமைச்சர் Melanie Joly தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் எப்போது ஏற்பட்டது என்பதை அந்த நாட்டின் தலைநகரில் உள்ள தீயணைப்பு அதிகாரி உறுதிப்படுத்தவில்லை.

August 2022 நிலவரப்படி, அபுஜாவில் 12 கனேடிய தூதர்களும் உள்நாட்டில் பணியமர்த்தப்பட்ட 32 ஊழியர்களும் பணியில் இருந்தனர்.

Related posts

கனடாவுக்கான ஸ்ரீலங்காவின் தூதுவராக சுமங்கல டயசை பரிந்துரைக்கும் இலங்கை அரசின் கோரிக்கையை நிராகரியுங்கள் – கனடிய அரசாங்கத்திடன் NCCT வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

Ontarioவில் இரண்டு வாரங்களில் 10 வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகள் தொற்றால் மரணம்

Lankathas Pathmanathan

பொருளாதாரம், சுகாதாரம் ஆகியன முக்கிய இடம் பிடித்த கட்சி தலைவர்களின் விவாதம்

Leave a Comment