தேசியம்
செய்திகள்

ஈரான் முன்னாள் அமைச்சருக்கு கனடாவில் தற்காலிக வதிவிட உரிமை மறுப்பு

ஈரான் முன்னாள் அமைச்சருக்கு தற்காலிக வதிவிட உரிமையை கனடா மறுக்கிறது.

ஈரானிய முன்னாள் சுகாதார அமைச்சர் Seyed Hassan Ghazizadeh Hashemi கனடாவில் தற்காலிகமாக வசிப்பதை 36 மாதங்களுக்கு கனடா தடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடிய அரசின் இந்த முடிவை குடிவரவு அமைச்சர் Marc Miller அறிவித்தார்.

ஈரான் அரச ஆட்சியில் மனித உரிமைகள் பதிவை மேற்கோள் காட்டி இந்த முடிவை கனடா எடுத்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி Hassan Rouhani தலைமையின் கீழ் 2013 முதல் 2019 வரை ஈரானிய அரசாங்கத்தின் சுகாதார அமைச்சராக செயத் Seyed Hassan Ghazizadeh Hashemi பணியாற்றினார்.

Quebec மாகாண சுற்றுலாத் துறைக்கான விளம்பரங்களில் Seyed Hassan Ghazizadeh Hashemi Montreal நகரில் இருக்கும் காட்சி வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் ஈரான் இஸ்லாமியக் குடியரசின் முன்னாள் சுகாதார அமைச்சர், கனடாவுக்கு திரும்புவதற்கும் தற்காலிக குடியிருப்பாளராக நுழைவதற்கும் தடை விதிக்கப்படும் என அமைச்சர் Marc Miller அறிவித்தார்

குடிவரவு, அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தின் 22வது பிரிவின் கீழ், ஒரு வெளிநாட்டுப் பிரஜைக்கு 36 மாதங்கள் வரை தற்காலிக வதிவிடத்தை மறுக்க குடிவரவு அமைச்சருக்கு அதிகாரம் உள்ளது.

Related posts

G20 நாடுகளின் கூட்டத்தில் ரஷ்ய அதிகாரிகளின் பங்கேற்பை எதிர்த்து கனடிய துணைப் பிரதமர் வெளிநடப்பு

Lankathas Pathmanathan

NDP வேட்பாளராக மற்றுமொரு தமிழர்!

Lankathas Pathmanathan

Alberta முதல்வர் பிரிவினைக்கு அடித்தளமிடுகிறார்?

Lankathas Pathmanathan

Leave a Comment