இந்த மாதத்தின் ஆரம்பத்தில் Mississauga நகரில் நிகழ்ந்த வாகன விபத்தில் காயமடைந்த தமிழர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
இந்த விபத்து Mavis & Hwy 407 சந்திப்புக்கு அருகாமையில் இந்த மாதம் 4ஆம் திகதி அதிகாலை நிகழ்ந்தது.
விபத்தில் படுகாயமடைந்த நிலையில் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை (15) வைத்தியசாலையில் மரணமடைந்தார்.
மரணமடைந்தவர் சின்னராசா சர்வேந்திரராஜா என குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர்.
இவர் இலங்கையில் யாழ்ப்பாணம் , வசாவிளானை பிறப்பிடமாக கொண்டவராவார்.
இந்த விபத்தில் காயமடைந்த இரண்டாவது வாகனத்தின் சாரதி படுகாயமடைந்த நிலையில் தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து Peel பிராந்திய காவல்துறையினர் உத்தியோகபூர்வ அறிக்கைகள் எதனையும் வெளியிடவில்லை.