கனடாவின் பல மாகாணங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் காட்டுத்தீ அடுத்த சில வாரங்களுக்கு தொடரும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
வடக்கு, மேற்கு கனடாவின் பெரிய பகுதிகளில் August, September மாதங்களில் சராசரிக்கும் அதிகமான காட்டுத்தீ தொடரும் என எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் கூறினர்.
இந்த ஆண்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் காட்டுத்தீக்கு காரணமான அதே வறட்சி நிலைமைகள் இந்த கோடையின் பிற்பகுதியில் தொடரும் என அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (11) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டனர்.
சில பகுதிகளில், மழை காட்டுத்தீயின் நீடிப்பை குறைக்க உதவியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
British Columbia, Northwest Territories, Yukon ஆகிய இடங்களில் காட்டுத்தீ தொடரும் நிலை உள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.
August மாதம் 10ஆம் திகதி வரை, 5,593 காட்டுத்தீ 13.4 மில்லியன் ஹெக்டேர் நிலத்தை எரித்துள்ளது.