தேசியம்
செய்திகள்

கறுப்பு ஜூலையின் 40 ஆம் ஆண்டை நினைவு கூறும் பிரதமர்

கறுப்பு ஜூலையின் 40 ஆம் ஆண்டை நினைவு கூறும் வகையில் பாதிக்கப்பட்டவர்களை நினைவேந்துவதாக பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்.

கறுப்பு ஜூலையை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில் பிரதமர் இந்த கருத்தை தெரிவித்தார்.

வெறுப்புக்கும், வன்முறைக்கும் எதிராக எப்போதும் குரல் கொடுப்பதற்கு உறுதியுடனிருப்பதை மீள உறுதிப்படுத்துகிறோம் என Justin Trudeau தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கும், அத்துமீறல்களுக்கும் பொறுப்புக்கூறப்படவேண்டுமென நாம் இன்றும் தொடர்ந்து கோருகிறோம் எனவும் பிரதமர் கூறினார்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியில், மிகவும் நலிவடைந்த சமூகங்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு கனடா தொடர்ந்து உதவும் என Justin Trudeau தனதறிக்கையில் குறிப்பிட்டார்

மே 18 ஐ, தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளாகப் பிரகடனம் செய்யும் பிரேரணையை கனேடிய நாடாளுமன்றம் கடந்த ஆண்டு ஒருமனதாக அங்கீகரித்ததை தனது அறிக்கையில் பிரதமர் நினைவு கூர்ந்தார்

Related posts

சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு கனேடியர்களுக்கான நீதிமன்ற விசாரணைகள் அடுத்த வாரம்!

Gaya Raja

சூடானில் இருந்து கனடியர்கள் பாதுகாப்பாக வெளியேறும் சந்தர்ப்பம் குறைகிறது

கனடா: கடந்த மாதம் 2 இலட்சத்து 7 ஆயிரம் வேலைகள் இழக்கப்பட்டன

Gaya Raja

Leave a Comment