தேசியம்
செய்திகள்

காட்டுத்தீ காரணமாக Torontoவின் காற்றின் தரம் உலகிலேயே மோசமானதாக உள்ளது!

நாடளாவிய ரீதியில் Northwest பிராந்தியத்தின் சில பகுதிகள், Atlantic கனடாவை தவிர ஏனைய மாகாணங்களுக்கு சுற்றுச்சூழல் கனடா சிறப்பு காற்றின் தர அறிக்கைகளை வெளியிட்டது.

இதில் Ontario, Quebec. ஆகிய மாகாணங்களின் பெரும் பகுதிகளும் அடங்குகின்றன.

உலகக் காற்றுத் தரக் குறியீட்டின்படி, காட்டுத்தீ புகை காரணமாக Torontoவின் காற்றின் தரம் தற்போது உலகிலேயே மோசமானதாக பட்டியலிடப்பட்டுள்ளது.

மில்லியன் கணக்கான கனடியர்களை பாதிக்கும் காட்டுத்தீ புகை குறைந்தது 2 நாட்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடரும் காட்டுத்தீ காரணமாக ஏற்படும் புகை அதிக அளவு காற்று மாசுபாட்டை ஏற்படுத்துவதாகவும் எச்சரிக்கப்படுகிறது.

Ontarioவில் Toronto பெரும் பாகம், Hamilton, Windsor, Barrie, London உட்பட Quebecகின் பெரும்பகுதி காட்டுத்தீ புகை மூட்டம் காரணமாக பாதிப்புக்குள்ளான பகுதிகளாக குறிப்பிடப்படுகின்றன.

இந்த நிலையில் நுரையீரல் அல்லது இதய நோய் உள்ளவர்கள், முதியவர்கள், குழந்தைகள் காட்டுத் தீ புகையால் மோசமான உடல்நல பாதிப்புகளை எதிர்கொள்ளும் அபாயம் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.

காட்டுத்தீயின் மாசுபாட்டின் அளவு காலப்போக்கில் மாறுபடலாம் எனவும் இருப்பிடத்தைப் பொறுத்து அது மாறுபடலாம் எனவும் குறிப்பிடப்படுகிறது.

நாளை இரவு சில பகுதிகளில் காற்றின் தரம் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதன்கிழமை (28) காலை வரை நாடளாவிய ரீதியில் 487 காட்டுத்தீ எரிந்து வருகிறது.

இவற்றில் 253 கட்டுப்பாட்டில் இல்லை என கூறப்படுகிறது.

அதேவேளை கனடாவில் தொடரும் காட்டுத் தீ காரணமாக அமெரிக்காவில் காற்றின் தர எச்சரிக்கைகளை விடுக்கப்படுகிறது.

அமெரிக்காவில் Missouri, Kentucky வரை புகை பரவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவில் Chicago, Detroit ஆகிய நகரங்களுக்கு காற்றின் தர எச்சரிக்கைகள் நடைமுறையில் உள்ளன.

Related posts

புதிய வீட்டு கட்டுமான தொழில்களுக்கு  திறமையான புதிய குடிவரவாளர்கள் தேவை

Lankathas Pathmanathan

உக்ரேனுக்காக கனடாவின் ஆதரவுக்கு ஐரோப்பிய ஆணைய தலைவர் நன்றி

Lankathas Pathmanathan

கனடாவில் ஆறாவது COVID அலை தவிர்க்க முடியாதது!

Lankathas Pathmanathan

Leave a Comment