தேசியம்
செய்திகள்

வெளிநாட்டு தலையீடு குறித்த பொது விசாரணையை அடுத்த மாதம் ஆரம்பம்

கனடிய அரசியலில் வெளிநாட்டு தலையீடு குறித்த பொது விசாரணையை நிராகரிக்கும் முடிவை David Johnston நியாயப்படுத்தினார்.

வெளிநாட்டு தலையீடுகள் குறித்து பொது விசாரணைக்கு அழைப்பு விடுப்பதற்கு எதிராக David Johnston அண்மையில் பரிந்துரைத்திருந்தார்.

இரண்டு மாத விசாரணைக்கு பின்னர் சிறப்பு அறிக்கையாளர் David Johnston கடந்த மாதம் தனது அறிக்கையை வெளியிட்டார்.

இந்த விடயம் குறித்து முன்னாள் ஆளுநர் நாயகம் செவ்வாய்க்கிழமை (06) காலை நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளை எதிர்கொண்டார்.

வெளிநாட்டு தலையீடுகள் குறித்த அச்சுறுத்தலுக்கு அரசாங்கத்தின் பதில் நடவடிக்கையில் குறிப்பிடத்தக்க குறைபாடுகளை கண்டதாக David Johnson கூறினார்.

இந்த விடயத்தில் பொது விசாரணையை அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ளதாக David Johnston கூறினார்.

சிறப்பு அறிக்கையாளர் பதவியில் இருந்து விலகுமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தாலும் தனக்கு வழங்கப்பட்ட கடமையை நிறைவேற்றுவதில் உறுதியாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related posts

ஏழு வருடங்களில் 3 பொது ஊழியர்களின் பாதுகாப்பு அனுமதியை இரத்து செய்த கனடா

Lankathas Pathmanathan

கனேடிய விமானங்களை நோக்கிய சீன விமானிகளின் நடவடிக்கைகள் பொறுப்பற்றவை: Trudeau விமர்சனம்

Ontarioவில் மீண்டும் ஒரு Omicron திரிபு

Lankathas Pathmanathan

Leave a Comment