Ontario மாகாண Liberal கட்சியின் தலைமை பதவிக்கு மூன்றாவது வேட்பாளர் தனது பெயரை பதிவு செய்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் Yasir Naqvi தலைமை பதவிக்கு தனது பெயரை பதிவு செய்துள்ளார்.
Ottawaவில் தனது பிரச்சாரத்தை Yasir Naqvi சனிக்கிழமை (03) ஆரம்பிப்பார்.
Ottawa மத்திய தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் Yasir Naqvi, முன்னர் Ontario மாகாண சபை உறுப்பினராக பதவி வகித்தார்
Ontario Liberal கட்சியின் தலைமைப் போட்டி அதிகாரப்பூர்வமாக இந்த மாதம் 9ஆம் திகதி ஆரம்பமானது.
Ontario மாகாண Liberal கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிட Mississauga நகர முதல்வர் Bonnie Crombie தயாராகி வருகிறார்.
Ontario Liberal தலைமையில் இருந்து 2022ஆம் ஆண்டு Steven Del Duca விலகியிருந்தார்.
இந்த நிலையில் கட்சி உறுப்பினர்கள் November 25, 26 ஆம் திகதிகளில் புதிய தலைவருக்கு வாக்களிக்கவுள்ளனர்.
Ontario Liberal புதிய தலைவர் December 2ஆம் திகதி அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே Liberal நாடாளுமன்ற உறுப்பினர் Nathaniel Erskine-Smith, Ontario Liberal மாகாண சபை உறுப்பினர் Ted Hsu ஆகியோர் Ontario Liberal கட்சியின் தலைமைப் போட்டியில் ஈடுபடும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.