December 12, 2024
தேசியம்
செய்திகள்

பதவி விலகாத David Johnstonனை விமர்சித்த NDP தலைவர்

வெளிநாட்டு தலையீடுகள் குறித்த சிறப்பு அறிக்கையாளர் பதவியில் இருந்து விலகப் போவதில்லை என்ற David Johnstonனின் முடிவை NDP தலைவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

David Johnston தனது பதவியில் இருந்து விலக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதன்கிழமை (31) பெரும்பான்மையாக வாக்களித்தனர்.

NDP முன்வைத்த பிரேரணை 174க்கு 150 என்ற வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது.

பிரதான எதிர்க்கட்சிகள் அனைத்தும் இந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தன.

ஆனாலும் தனது ஆணை முடியும் வரை பணியைத் தொடர வேண்டிய கடமை தனக்கு உள்ளதாக கூறி, பதவி விலக David Johnston மறுத்திருந்தார்.

இந்த விடயத்தில் David Johnsonனின் முடிவு குறித்து ஏமாற்றமடைந்ததாக Jagmeet Singh வியாழக்கிழமை (01) கூறினார்.

வியாழனன்று நாடாளுமன்ற கேள்வி நேரத்தில் இந்த விடயம் விவாதத்திற்கு உள்ளானது.

David Johnstonனை பிரதமர் பதவியில் இருந்து நீக்குவாரா என Conservative தலைவர் Pierre Poilievre கேள்வி எழுப்பினார்.

Related posts

Ontario அமைச்சரவையில் இருந்து விலகும் Parm Gill

Lankathas Pathmanathan

Quebec எரிபொருள் விநியோக நிறுவன வெடிப்பு சம்பவத்தில் மூவரை காணவில்லை

Lankathas Pathmanathan

Kitchener இல்ல வெடிப்பு சம்பவத்தில் நால்வர் காயம்

Lankathas Pathmanathan

Leave a Comment