Akwesasne Mohawk சமூகத்திற்காக மத்திய அரசாங்கத்தால் இன்று நிதியுதவி அறிவிக்கப்பட்டது.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்த்து செயல்பட மத்திய அரசாங்கத்தால் இந்த நிதியுதவி அறிவிக்கப்பட்டது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் 12 மில்லியன் டொலர்களுக்கு அதிகமான நிதியுதவியை வியாழக்கிழமை (25) பொது பாதுகாப்பு அமைச்சர் Marco Mendicino அறிவித்தார்.
இதில் அந்த பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கு உதவுவதற்காக 10.4 மில்லியன் டொலர் நிதியுதவியும் அடங்குகிறது.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் Akwesasne Mohawk சமூகத்தின் St. Lawrence ஆற்றில் எட்டு இந்திய, ருமேனிய குடியேற்றவாசிகள் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.
இவர்கள் படகு மூலம் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக கடக்க முயற்சி செய்தனர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.