தமிழர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்ய கொலையாளியை பணி அமர்த்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மூன்று வருடங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட 38 வயதான தீபா சீவரத்தினத்தின் மரண விசாரணை நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.
அவரது கணவர், 45 வயதான விஜேந்திரன் பாலசுப்ரமணியம் கொலை குற்றச் சாட்டுகளை எதிர்கொள்கின்றார்.
இந்த கொலையில் குற்றச்சாட்டு மொத்தம் நான்கு பேர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கு துரோகம், திட்டமிட்ட கொலை ஆகியவற்றை உள்ளடக்கியது என அரச தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
குற்றவாளிகள் நால்வர் மீதான குற்றச்சாட்டுகள் இதுவரை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை .
இந்த வழக்கு விசாரணை பல வாரங்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.