தேசியம்
செய்திகள்

கனடாவில் தரித்து நிற்கும் ரஷ்ய சரக்கு விமானம் உக்ரைனால் பறிமுதல்

Toronto Pearson சர்வதேச விமான நிலையத்தில் ஓராண்டுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ரஷ்ய சரக்கு விமானம் உக்ரைனால் பறிமுதல் செய்யப்படவுள்ளது.

உக்ரைன் பிரதமர் Denys Shmyhal இந்த தகவலை தெரிவித்துள்ளார்

ரஷ்யாவின் இந்த விமானம் உட்பட பிற சொத்துக்களை பறிமுதல் செய்து அவற்றை உக்ரைனின் நலனுக்காக உபயோகிக்க தயாராகி வருவதாக பிரதமர் Denys Shmyhal கூறியுள்ளார்

இந்த விமானம் Volga-Dnepr நிறுவனத்திற்கு சொந்தமானது என்பதும் அந்த நிறுவனம் கனடாவில் தடை செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கான ஆதரவு குறித்து விவாதிக்க கனடிய பிரதமர் Justin Trudeauவை கடந்த வாரம் Torontoவில் டொராண்டோவில் உக்ரைன் பிரதமர் Denys Shmyhal சந்தித்திருந்தார்.

இந்த சந்திப்பின் பின்னர் ரஷ்யாவுக்கு எதிராக புதிய தடைகள் கனடிய அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டன.

Related posts

பொதுத் தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடு குறித்து தொடரும் நெருக்கடி

கனேடிய பொதுத் தேர்தலில் தமிழர்கள்: ஷோபிகா வைத்தியநாதசர்மா

Gaya Raja

நெடுஞ்சாலை 401 விபத்தில் பலியான இருவர் இந்திய தமிழர்கள் – வெளியான அடையாளம்!

Lankathas Pathmanathan

Leave a Comment