தேசியம்
செய்திகள்

கனடாவில் 30 ஆயிரம் ஆப்கானியர்களின் மீள்குடியேற்றம்

August 2021 முதல் கனடாவில் மீள்குடியேற்றப்பட்ட ஆப்கானியர்களின் மொத்த எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது

ஆப்கானிஸ்தானில் இருந்து 300க்கும் மேற்பட்டோர் புதன்கிழமை (12) கனடா வந்தடைந்தனர்.

இதன் மூலம் தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதில் இருந்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆப்கானியர்கள் கனடாவை வந்தடைந்துள்ளனர்.

தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்திற்கு வந்த நிலையில், கனடா பல சிறப்புத் திட்டங்கள் மூலம் குறைந்தது 40 ஆயிரம் ஆப்கானியர்களை மீள்குடியேற்றுவதாக உறுதியளித்தது.

இந்த ஆண்டின் இறுதிக்குள் 40 ஆயிரம் ஆப்கானியர்களை மீள்குடியேற்ற முடியும் என கனடிய அரசாங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Related posts

RCMP ஆணையர் பதவி விலகல்

Lankathas Pathmanathan

Stanley Cup: இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெறுமா Edmonton Oilers?

Lankathas Pathmanathan

இஸ்ரேலுக்கு எதிரான இனப்படுகொலை குற்றச்சாட்டு தீர்ப்பை அவதானிக்கும் கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment