Edmonton நகருக்கு வடகிழக்கில் நிகழ்ந்த வாகன விபத்தில் Alberta மாகாண RCMP அதிகாரி மரணமடைந்தார்.
32 வயதான Constable Harvinder Singh Dhami என்ற RCMP அதிகாரி இந்த விபத்தில் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு RCMP அதிகாரிக்கு உதவ சென்றபோது, திங்கட்கிழமை (10) அதிகாலை 2 மணியளவில் அவரது வாகனம் தடுப்புச் சுவரில் மோதியது.
இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்தில் மரணமடைந்தார்.
இந்த சம்பவம் குறித்து Alberta மாகாண முதல்வர் Danielle Smith தனது இரங்கலை வெளியிட்டார்.