Pierre Elliott Trudeau அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரியும், பெரும்பாலான இயக்குநர் குழு உறுப்பினர்களும் பதவி விலகுகின்றனர்.
அறக்கட்டளையின் இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை (11) வெளியான அறிக்கையில் இந்த பதவி விலகல் அறிவித்தல் வெளியானது.
இரண்டு சீன கோடீஸ்வரர்கள் 2016 இல் இந்த அறக்கட்டளைக்கு 200 ஆயிரம் டொலர்களை நன்கொடையாக வழங்கியதாக செய்தி வெளியான நிலையில் இந்த பதவி விலகல் அறிவித்தல் வெளியானது.
ஏழு ஆண்டுகளுக்கு முன்னர், அறக்கட்டளை பெற்ற நன்கொடை குறித்த கேள்விகள் அதன் நிர்வாகம், தன்னார்வ இயக்குநர்கள் குழு, ஊழியர்கள் மீது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
இந்த நன்கொடைக்கும் சீன அரசாங்கத்திற்கும் இடையே சாத்தியமான தொடர்பு இருப்பதால் இந்த பணத்தை திருப்பி வழங்குவதாக அறக்கட்டளை கடந்த மாதம் கூறியது.
அறக்கட்டளை தனது கடமைகளை தொடர்ந்து நிறைவேற்றுவதை உறுதி செய்வதற்காக இடைக்கால அடிப்படையில் மூன்று இயக்குனர்கள் தொடர்ந்தும் பதவியில் இருப்பார்கள் என இந்த அறிக்கை கூறுகிறது.
பிரதமர் Justin Trudeau 2015 இல் பிரதமர் பதவியை ஏற்பதற்கு முன்னர் இந்த அறக்கட்டளையுடன் தனது உறவை முறித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது