December 12, 2024
தேசியம்
செய்திகள்

Quebec காவல்துறை அதிகாரி கத்தியால் குத்தி கொலை

Quebec காவல்துறை அதிகாரி ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு மரணமடைந்த சம்பவம் திங்கட்கிழமை (27) இரவு நிகழ்ந்தது.

கைது நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்தபோது Quebec மாகாண காவல்துறை அதிகாரி ஒருவர் திங்கள் இரவு கத்தியால் குத்தப்பட்டார்.

Quebec மாகாணத்தின் Mauricie பிராந்தியத்தில் Montreal இல் இருந்து வடகிழக்கே 100 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள Louiseville என்ற இடத்தில் ஒருவரை கைது செய்ய முயன்ற போது Quebec மாகாண காவல்துறை அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவத்தின் போது மற்றொரு அதிகாரி காயமடைந்தார்.

மரணமடைந்த காவல்துறை அதிகாரி Sgt. Maureen Breau என அடையாளம் காணப்பட்டார்.

பெண் அதிகாரியான இவர் 20 வருடங்களாக காவல் துறையில் பணியாற்றியவர் என தெரியவருகிறது.

சம்பவ இடத்தில் இருந்த மேலும் இரண்டு காவல்துறை அதிகாரிகள் கத்தி குத்து மேற்கொண்ட நபரை சுட்டுக் கொன்றனர்.

Quebec சுயாதீன விசாரணை பணியகம் இந்த சம்பவம் குறித்த விசாரணையை முன்னெடுக்கின்றது.

இந்த சம்பவம் குறித்து பிரதமர் Justin Trudeau அதிர்ச்சியும் கவலையும் வெளியிட்டுள்ளார்.

Related posts

சில மாகாணங்களில் புதிய கட்டுப்பாடுகள் – சில மாகாணங் களில் கட்டுப்பாடுகள் தளர்வு!

Gaya Raja

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இருந்து ரஷ்யாவை இடைநிறுத்த வேண்டும்: கனடா வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

NATO தலைவர் கனேடிய Arctic பாதுகாப்பு தளத்திற்கும் பயணம்

Lankathas Pathmanathan

Leave a Comment