December 12, 2024
தேசியம்
செய்திகள்

உக்ரைனுக்கு மேலும் நான்கு யுத்த பீரங்கிகளை வழங்கும் கனடா

கனடா மேலும் நான்கு யுத்த பீரங்கிகளை உக்ரைனுக்கு அனுப்புகிறது.

உக்ரைனுக்கு மேலும் ஆயுதங்களை வழங்குவதாக பிரதமர் Justin Trudeau வெள்ளிக்கிழமை (24) அறிவித்தார்.

ரஷ்யாவிற்கு எதிரான போரில் இந்த ஆயுதங்கள் உக்ரைனுக்கு உதவும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதன் மூலம் உக்ரைனின் ஆயுதப் படைகளுக்கு கனடா மொத்தம் எட்டு யுத்த பீரங்கிகளை கனடா நன்கொடையாக வழங்கியுள்ளது.

மேலும் கவச மீட்பு வாகனம் ஒன்றையும் ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட தோட்டாக்களையும் கனடா வழங்கவுள்ளது.

உக்ரைனுக்கு எதிரான யுத்தத்தில் ரஷ்யாவுக்கு ஆதரவு வழங்குபவர்களுக்கு எதிராக மேலும் தடைகளை அறிவிக்க Trudeau உறுதியளித்தார்.

ரஷ்யாவின் படையெடுப்பின் ஓராண்டு நிறைவான வெள்ளிக்கிழமை, ரஷ்ய ஜனாதிபதி Vladimir Putinனை பலவீனமானவர் எனவும் Trudeau விமர்சித்தார்.

Related posts

நிலநடுக்க மண்டலத்தில் உள்ளவர்களிடமிருந்து குடியேற்ற விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ள கனடா முடிவு

Lankathas Pathmanathan

உரிமையாளர்கள் அனுமதியின்றி வீடு விற்கப்பட்ட சம்பவம்

Lankathas Pathmanathan

சில நோயெதிர்ப்பு குறைபாடு உள்ளவர்களுக்கு கூடுதல் COVID தடுப்பூசி தேவைப்படலாம்!

Gaya Raja

Leave a Comment