தேசியம்
செய்திகள்

Toronto நகர முதல்வர் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை: Jennifer McKelvie உறுதி

Toronto நகர முதல்வர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முதல்வரின் சில பொறுப்புகளை ஏற்கவுள்ள நகர சபை உறுப்பினர் Jennifer McKelvie தெரிவித்தார்.

Toronto நகர முதல்வர் பதவியில் இருந்து John Tory முறைப்படி விலகினார்.

புதன்கிழமை (15) பின்னிரவு தனது பதவி விலகல் கடிதத்தை அவர் சமர்ப்பித்தார்.

வெள்ளிக்கிழமை (17) மாலை 5 மணி முதல் நகர முதல்வர் பதவியில் இருந்து John Tory விலகுவதாக அவரது அலுவலகம் அறிவித்தது

பதவியில் இருந்து விலகவுள்ளதாக அறிவித்த ஐந்து நாட்களுக்குப் பின்னர் John Tory தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.

COVID தொற்று காலத்தில் தனது அலுவலக ஊழியர் ஒருவருடன் உறவில் இருந்ததை ஏற்றுக் கொண்ட பின்னர் நகர முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக John Tory கடந்த வெள்ளிக்கிழமை (10) அறிவித்திருந்தார்.

வியாழன், வெள்ளிக்கிழமைகளில் John Tory பணி மாற்றத் திட்ட சந்திப்புகளில் பங்கேற்கவுள்ளார்.

வெள்ளி மாலை முதல் Toronto நகர முதல்வரின் சில பொறுப்புகளை நகர சபை உறுப்பினர் Jennifer McKelvie பொறுப்பேற்கவுள்ளார்.

ஆனால் அவர் நகர முதல்வராக பதவியை வகிக்க முடியாது என கூறப்படுகிறது

இந்த நிலையில் நகர முதல்வர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் Jennifer McKelvie உறுதிப்படுத்தினார்.

Related posts

கனேடிய மக்கள் தொகையில் கால் பகுதியினர் குடிவரவாளர்கள்

Lankathas Pathmanathan

பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபட நிர்ப்பந்தித்ததாக குற்றம் சாட்டப்பட்ட தமிழர்

Lankathas Pathmanathan

Quebec மாகாண தலைவர்களின் ஆங்கில விவாதம் நிறுத்தம்

Lankathas Pathmanathan

Leave a Comment