December 12, 2024
தேசியம்
செய்திகள்

Quebec வாசிகள் குறித்த கருத்துகளுக்கு புதிய இஸ்லாமிய எதிர்ப்பு பிரதிநிதி மன்னிப்பு கோரினார்

கனடாவின் புதிய இஸ்லாமிய எதிர்ப்பு பிரதிநிதி Quebec வாசிகள் குறித்த கருத்துகளுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

தனது வார்த்தைகள் Quebec வாசிகளை காயப்படுத்தியதற்காக வருந்துவதாக Amira Elghawaby கூறினார்.

இஸ்லாமிய வெறுப்பு நடவடிக்கையை எதிர்த்து போராடுவதற்காக கனடாவின் முதல் சிறப்பு பிரதிநிதியாக கடந்த வாரம் Elghawaby நியமிக்கப்பட்டார்.

ஆனாலும் 2019ஆம் ஆண்டு எழுதிய கட்டுரை காரணமாக அவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என Quebec அரசியல்வாதிகள் பலர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் புதன்கிழமை (01) Bloc Quebecois தலைவர் Yves-Francois Blanchet உடன் சந்திப்பொன்றை Elghawaby முன்னெடுத்தார்.

அதேவேளை Elghawabyக்கு ஆதரவாக பிரதமர் Justin Trudeau இன்று தொடர்ந்தும் இரண்டாவது நாளாகவும் கருத்து தெரிவித்தார்.

மதம் குறித்த கடினமான உரையாடல்களில் கனேடியர்களுக்கு உதவுவதற்கு தகுந்த நபர் Elghawaby என பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

Quebec மதத்துடன் சிக்கலான வரலாற்றைக் கொண்டுள்ளது எனவும் இன்று காலை Trudeau கூறினார்.

Related posts

துப்பாக்கி கட்டுப்பாட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது

Lankathas Pathmanathan

Ontario மாகாண Liberal கட்சியின் அடுத்த தலைவர் பதவிக்கான முதலாவது விவாதம்

Lankathas Pathmanathan

Alberta மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து தீ ஆபத்து

Leave a Comment