January மாதம் நாடு முழுவதும் உணரப்பட்ட மிதமான காலநிலை February முதலாம் திகதி முதல் மாற்றமடையவுள்ளது.
குறிப்பாக கிழக்கு கனடா February மாதம் முழுவதும் கடுமையான குளிர் நிலையை எதிர்கொள்ளவுள்ளது
புதன்கிழமை (01) முதல் கிழக்கு கனடாவின் பெரும்பகுதி முழுவதும் கடுமையான குளிர் நிலை உணரப்படும் என எதிர்வு கூறப்படுகிறது.
சுற்றுச்சூழல் கனடா இதற்கான எச்சரிக்கை ஒன்றை செவ்வாக்கிழமை (31) வெளியிட்டது.
வெள்ளிக்கிழமை (03) வரை கிழக்கு கனடாவில் கடுமையான குளிர் நிலை உணரப்படவுள்ளது.
வெள்ளிக்கிழமையின் பின்னர் Ontario, Quebec, Atlantic கனடாவின் பெரும்பகுதியில் கடுமையான குளிர் நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது .
Toronto பெரும்பாகத்தில் வெள்ளிக்கிழமை இரவு குளிர் நிலை – 20 பாகை செல்சியஸ் வரை உணரப்படும் என எதிர்வு கூறப்படுகிறது.
Ottawaவில் -30 பாகை செல்சியஸ், Montrealலில் -34 பாகை செல்சியஸ் Quebec Cityயில் பாகை செல்சியஸ் என வெள்ளிக்கிழமை இரவு குளிர் நிலை உணரப்படும்.