தேசியம்
செய்திகள்

பிரதமரின் கருத்தை மறுக்கும் சுகாதார அமைச்சரின் கருத்து

மத்திய அரசின் சுகாதார நிதி ஒப்பந்தத்தை முதல்வர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என பிரதமர் Justin Trudeau நம்பிக்கை தெரிவித்தார்

ஆனாலும் மாகாணங்களுடன் ஒரு சுகாதார நிதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு முன்னர் பல படிகளை தாண்ட வேண்டியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos தெரிவித்தார்.

சுகாதார அமைச்சரின் கருத்தை ஏற்றுக் கொண்ட பிரதமர், இந்த ஒப்பந்தத்தை முதல்வர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என நம்பிக்கை” தெரிவித்தார்.

மாகாணங்களுடன் சுகாதாரப் பாதுகாப்பு குறித்த உரையாடல்களின் சாதகமான பெறுபேறுகள் விரைவில் வெளியாகக்கூடும் என திங்கட்கிழமை (16) பிரதமர் அறிவித்திருந்தார்.

ஆனாலும் அதனை மறுக்கும் விதமாக சுகாதார அமைச்சரின் கருத்து அமைந்திருந்தது.

இரு தரப்பினரும் வரவிருக்கும் வாரங்களில் தொடர்ந்து செயல்பட்டு இணக்கம் காணப்பட வேண்டிய ஒரு விடயம் இதுவென அமைச்சர் Duclos செவ்வாய்க்கிழமை (17) கூறினார்.

Related posts

சீன அரசிற்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் Hydro-Quebec ஊழியர் கைது

Lankathas Pathmanathan

சீனாவில் 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற கனேடியர் !

Gaya Raja

ஆரம்பமானது புதிய நாடாளுமன்ற அமர்வு – புதிய சபாநாயகர் தேர்வு

Lankathas Pathmanathan

Leave a Comment