தேசியம்
செய்திகள்

இலங்கை அரச அதிகாரிகள் மீதான தடை கனடிய தமிழர்களின் கூட்டு வெற்றி: ஹரி ஆனந்தசங்கரி

நான்கு இலங்கை அரச அதிகாரிகள் மீதான தடை அறிவித்தல் கனடிய தமிழர்களின் ஒரு கூட்டு வெற்றி என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

செய்வாய்க்கிழமை (10) வெளியான தடை அறிவித்தல் குறித்து தேசியத்திக்கு வழங்கிய பிரதியேக செவ்வியில் அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.

போர்க் குற்றவாளிகள் மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் மீது கனடா விதித்த தடைகளை Scarborough-Rouge Park நாடாளுமன்ற உறுப்பினரான ஹரி ஆனந்தசங்கரி வரவேற்றார்.

கனடிய அரசு இந்த நான்கு இலங்கை அரச அதிகாரிகள் மீதும் விதித்த தடைகள், இலங்கையில் பொறுப்புக்கூறலை நோக்கிய முக்கியமான அடுத்த கட்டமாக அமைகின்றன எனவும் அவர் கூறினார்.

இந்த தடைகளை விதிப்பதற்கு உழைத்த கனடிய பிரதமர் Justin Trudeau, வெளியுறவு அமைச்சர் Melanie Joly , நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல்வேறு அமைப்புகளுக்கும் தனிநபர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி பாராட்டைத் தெரிவித்தார்.

Related posts

Albertaவில் மீண்டும் ஆட்சியமைக்கும் United Conservative கட்சி

Lankathas Pathmanathan

இஸ்ரேல்-காசா போரில் ஏழு கனடியர்கள் மரணம்

Lankathas Pathmanathan

Albertaவில் காட்டுத்தீயின் அச்சுறுத்தல் அதிகரிப்பு

Leave a Comment