தேசியம்
செய்திகள்

புதிய ஆண்டில் COVID தொற்றின் பரவல் அதிகரிக்கக்கூடும்: Dr. Tam

புதிய ஆண்டில் COVID தொற்றின் பரவல் அதிகரிக்கக்கூடும் என கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி Dr. Theresa Tam எச்சரிக்கின்றார்.

எதிர்கால தொற்று நோய்களைத் தடுக்க அரசாங்கங்கள் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

The Canadian Press ஊடகத்திற்கு வழங்கிய ஆண்டு இறுதி பேட்டியில் அவர் இதனை தெரிவித்தார்.

தொற்றின் பரவல் குறித்த விடயத்தில் கனடியர்களை விழிப்புடன் இருக்குமாறு Dr. Tam வலியுறுத்தினார்.

விடுமுறை நாட்களில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தொற்றின் அடுத்த கட்டம் தங்கியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

Related posts

மீண்டும் அதிகரிக்கும் எரிபொருளின் விலை

Lankathas Pathmanathan

பாலஸ்தீன பொதுமக்களுக்கு 25 மில்லியன் டொலர்கள் கனடா உதவி

Gaya Raja

தமிழ் பெண்ணின் மரணத்தில் கணவர் முதல் நிலைக் கொலையாளியென தீர்ப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment