September 28, 2026
தேசியம்
செய்திகள்

James Smith Cree முதற்குடி பாதுகாப்புக்கு பிரதமர் நிதி உதவி

Saskatchewan மாகாணத்தின் James Smith Cree Nation பாதுகாப்புக்கு 62.5 மில்லியன் டொலர் நிதி உதவியை பிரதமர் Justin Trudeau அறிவித்தார்.

கடந்த September மாதம், 11 பேர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட Saskatchewan முதற்குடி பகுதிக்கு திங்கட்கிழமை (28) பிரதமர் விஜயம் மேற்கொண்டார்.

பலியானவர்களின் கல்லறைகளுக்கு சென்று அஞ்சலி செலுத்தியதுடன் அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் பிரதமர் சந்தித்தார் .

முதற்குடி சமூகத்தின் தலைவர்கள், சமூக உறுப்பினர்களுடனான சந்திப்புகளையும் Trudeau மேற்கொண்டார்.

திங்கள் மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் இந்த நிதி உதவியை அறிவித்தார்.

இந்த விஜயத்தின் போது பிரதமருடன் சுதேச சேவைகள் அமைச்சர் Patty Hajdu பயணித்தார்

James Smith Cree Nation பகுதியில் September 4ஆம் திகதி நிகழ்ந்த கத்தி குத்தில் 11 பேர் பலியானதுடன் 18 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Pierre Poilievre வெற்றியை தடுக்க Justin Trudeau பதவி விலக வேண்டும்?

Lankathas Pathmanathan

சட்ட நடவடிக்கை முன்னெடுக்கும் Han Dong

Lankathas Pathmanathan

கனடா இந்த வாரம் 20 இலட்சம் தடுப்பூசிகளை பெறுகிறது!

Gaya Raja

Leave a Comment