தேசியம்
செய்திகள்

முன்னாள் மனைவியை கொலை செய்த தமிழருக்கு எதிராக வழக்கு விசாரணை அடுத்த வருடம் தொடரும்

தனது முன்னாள் மனைவியை கொலை செய்த தமிழருக்கு எதிராக ஆரம்பமான வழக்கு விசாரணை அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் மீண்டும் தொடரவுள்ளது.

தனது முன்னாள் மனைவி தர்ஷிகா ஜெகநாதனை கொலை செய்த குற்றச்சாட்டை சசிகரன் தனபாலசிங்கம் எதிர்கொள்கிறார்.

இவருக்கு எதிராக கடந்த 16ஆம் திகதி  வழக்கு விசாரணை ஆரம்பமானது.

தர்ஷிகா ஜெகநாதன் தன்னுடன் தொடர்ந்து வாழவில்லை என்றால் அவரை கொன்று விடுவேன் என சசிகரன் தனபாலசிங்கம் தன்னிடம் கூறியதாக குடும்ப நண்பரான சோமங்கல சோமகாசன் சாட்சியம் அளித்தார்.

2017 ஆம் ஆண்டு தனது மனைவி அவரை விட்டு பிரிந்த சிறிய காலத்தில் தனக்கும் அவருக்கும் இடையில் மத்தியஸ்தராக செயற்படுமாறு சசிகரன் தனபாலசிங்கம் தன்னிடம் கோரியதாக சோமங்கல சோமகாசன் தெரிவித்தார்.

தர்ஷிகா ஜெகநாதன் தன்னுடன் வாழவில்லை என்றால் தான் அவரை வாகனத்தால் மோதி கொலை செய்து விடுவேன் என சசிகரன் தனபாலசிங்கம் தன்னிடம் கூறியதாக சோமங்கல சோமகாசன் காவல்துறையினருக்கு  வழங்கிய வாக்கு மூலத்தில் தெரிவித்தார்.

சசிகரன் தனபாலசிங்கம்  திருமணத்திற்காக செலவழித்த பணம், தர்ஷிகா ஜெகநாதனுக்காக அவர் வாங்கிய நகைகள் குறித்து சசிகரன் தனபாலசிங்கத்தின்தாயார் மிகவும் கோபமாக இருந்ததாகவும் சோமங்கல சோமகாசன் தனது சாட்சியத்தில்  கூறினார்

Related posts

முடக்கப்பட்ட Freedom Convoy அமைப்பாளர்களின் நிதியை பெறுவதற்கான முயற்சி தோல்வி

Lankathas Pathmanathan

ஊழியர்கள் சங்கத்தின் பேச்சுவார்த்தையில் கனடிய அரசாங்கம் முட்டுக்கட்டை?

Lankathas Pathmanathan

பிரதமர் Trudeau 10 நாள் சர்வதேச பயணம்

Lankathas Pathmanathan

Leave a Comment