தேசியம்
செய்திகள்

முற்றுகை போராட்டத்தின் போது சட்டத்தை அமுல்படுத்துவது சாத்தியமற்றதாக இருந்தது: பொது பாதுகாப்பு அமைச்சர்

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் நிகழ்ந்த முற்றுகை போராட்டத்தின் போது சட்டத்தை அமுல்படுத்துவது சாத்தியமற்றதாக இருந்தது என பொது பாதுகாப்பு அமைச்சர் Marco Mendicino தெரிவித்துள்ளார்

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் எதிர்ப்பாளர்களை அகற்றுவதற்காக சர்ச்சைக்குரிய அவசரகாலச் சட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முடிவைத் தூண்டியதன் காரணிகளில் ஒன்றாக இது அமைந்தது என Mendicino கூறினார்.

பொது ஒழுங்கு அவசர ஆணைய விசாரணையில் செவ்வாய்க்கிழமை (22) அமைச்சர் Mendicino சாட்சியமளித்தார்.

நாடாளுமன்றம் உட்பட முக்கியமான உள்கட்டமைப்புகளை பாதுகாக்க வேண்டும் என்பது அவசரகாலச் சட்டத்தை செயல்படுத்துவதற்கான காரணிகளில் பிரதானமாக இருந்தது என அமைச்சர் தனது சாட்சியத்தில் கூறினார்.

இந்த போராட்டத்தில் இரு குழுவினர் ஈடுபட்டனர் என கூறிய அமைச்சர், ஒரு குழு அரசாங்கக் கொள்கைகளுக்கு எதிராக தமது எதிர்ப்பை சட்டப்பூர்வமாக பதிவு செய்தது எனவும் மற்றொன்று தீவிர நோக்கங்களைக் கொண்டிருந்தது எனவும் அவர் கூறினார்.

அமைச்சர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கு இடையேயான உரையாடல்களை எளிதாக்க ஒரு மத்தியஸ்தரை பணியமர்த்துவது குறித்து அரசாங்கம் கருதியது எனவும் Mendicino கூறினார்.

பல மணிநேரம் தொடர்ந்த Mendicinoவின் சாட்சியத்தை தொடர்ந்து, அரசுகளுக்கிடையேயான விவகார அமைச்சர் Dominic LeBlanc முற்றுகை போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த தனது சாட்சியத்தை வழங்கினார்.

இந்த வாரம் முழுவதும் மேலும் அமைச்சர்கள் ஆணையத்தின் முன் சாட்சியமளிப்பார்கவுள்ளனர்.

பிரதமர் Justin Trudeauவின் சாட்சியம் வெள்ளிக்கிழமை (35) பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

கடந்த மாதம் தொற்றாளர்களுடன் 400க்கு அதிகமான விமானங்கள் கனடாவை வந்தடைந்தன!

Gaya Raja

பாடசாலை பேருந்து விபத்துக்குள்ளானதில் ஐந்து மாணவர்கள் காயம்

Lankathas Pathmanathan

தெற்கு Ontarioவிற்கு சுற்றுச்சூழல் கனடா எச்சரிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment