தேசியம்
செய்திகள்

அவசரகாலச் சட்டத்தை செயல்படுத்துவதை ஆதரித்தேன்: CSIS தலைவர்

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் நிகழ்ந்த முற்றுகை போராட்டத்தின் போது அவசரகாலச் சட்டத்தை செயல்படுத்துவதை தான் ஆதரித்ததாக CSIS தலைவர் David Vigneault தெரிவித்தார்.

கடந்த குளிர்காலத்தில் முற்றுகை போராட்டத்தின் போது அவசரகாலச் சட்டம் தேவை என பிரதமர் Justin Trudeauவிடம் கூறியதாக CSIS தலைவர் திங்கட்கிழமை (21) தனது சாட்சியத்தில் கூறினார்.

கனடாவின் உயர்மட்ட பாதுகாப்பு, உளவுத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவின் சாட்சியத்துடன் இந்த வார விசாரணை ஆரம்பமானது.

பொது ஒழுங்கு அவசர ஆணையம் விசாரணையின் பிரதான சாட்சியங்கள் திங்களன்று ஆரம்பமாகின.

அவசரகாலச் சட்ட விசாரணையில் பிரதமர் Trudeau தவிர, ஏழு அமைச்சர்கள் இந்த வாரம் சாட்சியமளிக்க உள்ளார்.

திங்கள் மாலை அவசர தயார் நிலை அமைச்சர் Bill Blair விசாரணையில் சாட்சியமளித்தார்.

ஐந்து வாரங்களுக்கு மேலாக தொடர்ந்த விசாரணையில் 60க்கும் மேற்பட்டவர்கள் இதுவரை சாட்சியமளித்துள்ளனர்.

Related posts

Pope தனது கனடிய பயணத்தில் முதற்குடியினர் முன்னாள் வதிவிடப் பாடசாலைக்கும் செல்வார்

Lankathas Pathmanathan

Trudeau: கரணம் தப்பினால் மரணம்!

Gaya Raja

Montreal நகரில் தாய், மகள் கொலை

Lankathas Pathmanathan

Leave a Comment