September 16, 2026
தேசியம்
செய்திகள்

கனடா குளிர் காய்ச்சல் தொற்றுக்குள் நுழைகிறது: பொது சுகாதார நிறுவனம்

காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கனடா குளிர் காய்ச்சல் தொற்றுக்குள் நுழைகிறது என கனடாவின் பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த வார எண்ணிக்கையான 6.3 சதவீதத்தில் இருந்து 11.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இது வழமையான பருவகால எண்ணிக்கையான 5 சதவீதத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகும்

Ontario, New Brunswick, Alberta, Saskatchewan முழுவதும் உள்ள ஒன்பது பிராந்தியங்கள், October 30 முதல் November 5 வரையிலான சமீபத்திய அறிக்கை வாரத்தில் உள்ளூர் மயமாக்கப்பட்ட காய்ச்சல் எண்ணிக்கையை அறிவித்தன.

Quebec, Nova Scotia, Prince Edward Island மாகாணங்களும் 22 பிராந்தியங்களில் காய்ச்சல் எண்ணிக்கையை அறிவித்தன.

British Columbia, Manitoba, Nunavut ஆகியவை பொது சுகாதார நிறுவனத்திற்கு தரவுகளை வெளியிடவில்லை.

Related posts

Toronto நகர முதல்வர் பதவிக்கு தமிழர் போட்டி

Lankathas Pathmanathan

Toronto பாடசாலை வாரிய அறங்காவலர் தேர்தலில் தமிழர் போட்டி

Lankathas Pathmanathan

தடுப்பூசி கடவுச்சீட்டை Quebec நடைமுறைபடுத்துகிறது !

Gaya Raja

Leave a Comment