December 12, 2024
தேசியம்
செய்திகள்

Hockey கனடாவுக்கு நிதியுதவியை நிறுத்த பெரு நிறுவனங்கள் முடிவு

Hockey கனடாவுக்கு இந்த வருடம் நிதியுதவி செய்யப்போவதில்லை என Canadian Tire, Telus, Tim Hortons, Scotia வங்கி ஆகிய நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

Hockey Quebec, Hockey கனடாவுக்கான நிதியை நிறுத்தி வைத்துள்ளது.

தாம் எதிர்கொள்ளும் தீவிரமான சூழ்நிலையை புரிந்து கொள்ள Hockey கனடா தவறி வருகிறது என புதன்கிழமை (05) பிரதமர் Justin Trudeau கூறியிருந்த நிலையில் இந்த அறிவித்தல் வெளியானது.

தற்போது எதிர்கொள்ளப்படும் தீவிரமான சூழ்நிலைக்கு அது எவ்வாறு பங்களித்தது என்பதைப் புரிந்து கொள்ள Hockey கனடா தவறிவிட்டது எனவும் Trudeau தெரிவித்திருந்தார்.

Hockey கனடா அதிகாரிகள் பாலியல் வன்கொடுமைகளை கையாள்வது குறித்த விசாரணையை நாடாளுமன்ற குழு கூட்டத்தில் அதிகாரிகள் எதிர்கொண்ட நிலையில் பிரதமரின் இந்த கருத்து வெளியானது குறிப்பிடத்தக்கது.

Related posts

Albertaவை தாக்கிய மிகப்பெரிய நில நடுக்கம்!

Lankathas Pathmanathan

Ontario சட்டமன்றத்தில் தமிழர்கள் மீதான இனப்படுகொலை சட்ட மூலம்: இலங்கை அரசாங்கம் எதிர்ப்பு

Gaya Raja

இந்த வாரத்துடன் 30 மில்லியன் தடுப்பூசிகள் கனடாவை வந்தடையவுள்ளன!

Gaya Raja

Leave a Comment