December 12, 2024
தேசியம்
செய்திகள்

பிரதமர் – எதிர்க்கட்சி தலைவர் நாடாளுமன்றத்தில் விவாதம்

Conservative தலைமைப் பதவியை வெற்றிபெற்ற பின்னர் முதல் தடவையாக Pierre Poilievre, பிரதமர் Justin Trudeau ஆகியோர் நாடாளுமன்ற கேள்வி நேரத்தில் விவாதித்துள்ளனர்.

பிரதமர் Trudeau எதிர்கட்சி தலைவர் Poilievre ஆகியோர் வியாழக்கிழமை (22) கேள்வி நேரத்தில் வாழ்க்கைச் செலவு குறித்து விவாதித்தனர்.

புதிய Conservative தலைவர் தெரிவான பின்னரான இருவருக்கும் இடையிலான முதலாவது நேரடி விவாதம் இதுவாகும்.

புதிய நாடாளுமன்ற அமர்வில் முதல் இரண்டு கேள்வி நேரங்களை பிரதமர் Trudeau தவறவிட்டிருந்தார்.

Trudeau திங்களன்று மகாராணியின் இறுதிச் சடங்கிலும், அதைத் தொடர்ந்து ஐ.நா. பொதுச் சபை அமர்விலும் கலந்து கொண்ட நிலையில் இரண்டு நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொள்ளவில்லை.

Related posts

Ontarioவில் தட்டம்மை – measles – எச்சரிக்கை

Lankathas Pathmanathan

கனேடிய மக்கள் தொகையில் கால் பகுதியினர் குடிவரவாளர்கள்

Lankathas Pathmanathan

Ontarioவில் அமுலில் வந்த அவசரகால நிலை!

Lankathas Pathmanathan

Leave a Comment