December 12, 2024
தேசியம்
செய்திகள்

வாழ்க்கைச் செலவு பிரதான பேசுபொருள் ஆகும் Liberal அரசாங்கத்தின் அமைச்சரவை சந்திப்பு

செவ்வாய்க்கிழமை (06) ஆரம்பமான Liberal அரசாங்கத்தின் அமைச்சரவை சந்திப்பில் வாழ்க்கைச் செலவு, பணவீக்கம் ஆகியவை பிரதான பேசுபொருள் ஆகின்றன.

இம்மாத இறுதியில் நாடாளுமன்ற அமர்வுகள் மீண்டும் ஆரம்பிப்பதற்கு முன்னர் பிரதமர் Justin Trudeau  தனது அமைச்சர்களுடன் செவ்வாய்க்கிழமை முதல் புதன்கிழமை வரை Vancouverரில் சந்திக்கின்றார்.

பணவீக்கம், அதிகரித்து வரும் உணவுச் செலவுகள், எரிபொருள் விலை உயர்வு போன்ற விடயங்கள் இந்த அமைச்சர்கள் சந்திப்பில் விவாதிக்கப்படவுள்ளன.

இவை மீண்டும் நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பிக்கும் போது கவனத்தை ஈர்க்கும் என விடயங்களாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

Quebecகில் கடத்தப்பட்ட குழந்தையை கண்டுபிடிக்க வடமேற்கு New Brunswick வரை Amber எச்சரிக்கை!

Gaya Raja

Prince Edward தீவில் பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு மின்சாரம் இல்லை

Lankathas Pathmanathan

York பிராந்திய காவல்துறையினரால் Torontoவைச் சேர்ந்த தமிழர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு

Lankathas Pathmanathan

Leave a Comment