Ontario மாகாண மருத்துவமனை பணியாளர் நெருக்கடியை எதிர்கொள்ள மத்திய அரசாங்கம் உதவ வேண்டும் என முதல்வர் Doug Ford வலியுறுத்தினார்.
அதிகரித்துவரும் மருத்துவமனை ஊழியர் நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில் மத்திய அரசாங்கம் நிதி உதவி வழங்க வேண்டும் என புதன்கிழமை (03) Ford கூறினார்.
ஆனாலும் பணியாளர் நெருக்கடியை எதிர்கொள்ள முதல்வர் Ford புதிய தீர்வுகள் எதையும் முன்வைக்கவில்லை.
ஊழியர் நெருக்கடி காரணமாக அண்மைய காலத்தில் மருத்துவமனை அவசர அறைகளும், தீவிர சிகிச்சை பிரிவுகளும் மூடப்படுகின்றன.
ஊழியர் பற்றாக்குறையால் Ontario முழுவதும் உள்ள சுமார் 25 மருத்துவமனைகள் நீண்ட வார இறுதியில் மாற்றங்களைச் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டதாக Ontario தாதியர் சங்கம் செவ்வாய்கிழமை தெரிவித்திருந்தது.