December 12, 2024
தேசியம்
செய்திகள்

Conservative தலைவரை தெரிவு செய்யும் தேர்தலில் 679 ஆயிரம் உறுப்பினர்கள் வாக்களிக்கலாம்

புதிய தலைவரை தெரிவு செய்யும் தேர்தலில் வாக்களிக்க 679 ஆயிரம் உறுப்பினர்கள் தகுதி பெற்றுள்ளதாக Conservative கட்சி தெரிவித்துள்ளது

Conservative கட்சி தனது இறுதி உறுப்பினர் பட்டியலை வெள்ளிக்கிழமை (29) அறிவித்தது.

தலைமைப் போட்டியில் வாக்களிக்க மொத்தம் 678,708 பேர் தகுதி பெறுவார்கள் என கட்சி தெரிவிக்கிறது.

கடந்த ஆண்டை விட உறுப்பினர் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது என கட்சியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இது Conservative கட்சியை உறுப்பினர்களின் எண்ணிக்கையினால் கனடிய வரலாற்றில் மிகப்பெரிய கட்சியாக மாற்றுகிறது என அவர் தெரிவித்தார் .

Conservative கட்சியின் புதிய தலைவர் September 10ஆம் திகதி தெரிவு செய்யப்படவுள்ளார்.

Related posts

200க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் காவல்துறையினரால் பறிமுதல்

Lankathas Pathmanathan

Ottawaவில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம்!

Lankathas Pathmanathan

Toronto பல்கலைக்கழக ஆராய்ச்சியாளருக்கு Nobel பரிசு

Lankathas Pathmanathan

Leave a Comment