சில கனடிய விமான நிலையங்களில் பாதிக்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்படுகின்றன அல்லது தாமதமாகின்றன என புதிய தரவு ஒன்று தெரிவிக்கிறது.
கனடாவின் சில பெரிய விமான நிலையங்களில் 51 சதவீத உள்நாட்டு, சர்வதேச விமானங்கள் தாமதமாகின்றன அல்லது இரத்து செய்யப்பட்டன.
June 22 முதல் 27 வரையிலான காலப்பகுதியில் இந்த தரவுகள் பதிவாகியுள்ளன.
Toronto Pearson விமான நிலையம், Montreal Trudeau விமான நிலையம், Ottawa விமான நிலையம், Calgary விமான நிலையம், Vancouver விமான நிலையங்களில் இந்த தரவுகள் பதிவாகியுள்ளன.
இந்த கால எல்லையில் Toronto Pearson சர்வதேச விமான நிலையத்தில் 11 சதவீத விமானங்கள் இரத்து செய்யப்பட்டதுடன் 52 சதவீத விமானங்கள் தாமதமாகின.