December 12, 2024
தேசியம்
செய்திகள்

Ontario அமைச்சரவையின் சட்டமன்ற உதவியாளர்களாக இரண்டு தமிழர்கள் நியமனம்

Ontario மாகாண அமைச்சரவையின் சட்டமன்ற உதவியாளர்களாக இரண்டு தமிழ் மாகாணசபை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முதல்வர் Doug Ford புதன்கிழமை (29) அறிவித்த மாகாணசபை உதவியாளர்கள் நியமனங்களில் விஐய் தணிகாசலம், லோகன் கணபதி ஆகியோரின் பெயரும் இடம்பிடித்துள்ளது.

Scarborough Rouge Park தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்ற விஐய் தணிகாசலம் உள்கட்டமைப்பு அமைச்சரின் மாகாணசபை உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

உள்கட்டமைப்பு அமைச்சர் Kinga Surma உடன் மாகாணசபை உதவியாளர்களாக நியமிக்கப்பட்ட விஐய் தணிகாசலம்,  Amarjot Sandhu ஆகியோர்

 

Markham – Thornhill தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்ற லோகன் கணபதி
குழந்தைகள், சமூகம், சமூக சேவைகள் அமைச்சரின் மாகாணசபை உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

குழந்தைகள், சமூகம், சமூக சேவைகள் அமைச்சர் Merrilee Fullerton உடன் மாகாணசபை உதவியாளர் லோகன் கணபதி

மாகாணத்தின் உள்கட்டமைப்பு அமைச்சராக கடந்த வாரம் Kinga Surma நியமிக்கப்பட்டார்.

அவரது உதவியாளர்களாக விஐய் தணிகாசலம்,  Amarjot Sandhu ஆகியோர் புதனன்று நியமிக்கப்பட்டனர்.

விஐய் தணிகாசலம் கடந்த அமைச்சரவையில் போக்குவரத்துத்துறை அமைச்சின் மாகாணசபை உதவியாளராக நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாகாணத்தின் குழந்தைகள், சமூகம், சமூக சேவைகள் அமைச்சராக கடந்த வாரம் Merrilee Fullerton நியமிக்கப்பட்டார்.

Related posts

பேரூந்து தாக்குதலில் ஒருவர் மீது நான்கு பயங்கரவாத குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan

CUPE உறுப்பினர்களுக்கு எதிரான தொழிலாளர் வாரிய வழக்கு மீளப்பெறப்பட்டது

Lankathas Pathmanathan

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் May மாதம் 21ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

Leave a Comment